தரங்கம்பாடி வட்டம் காத்தான்சாவடி பகுதியில் கல்லூரி மாணவர்கள், மகளிர் சுய உதவிக் குழுவினர், சமூக ஆர்வலர்கள் மூலம் பனை விதைகள் சேகரிப்பு முகாமினை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் மகாபாரதி கலந்துகொண்டு தெரிவித்தபோது, நுங்குவிற்கு இணையாக ஏதும் இல்லை. பனை கிழங்கும் நாம் உண்ணலாம். இது ஒரு உன்னதமான பொருள். உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது. இயற்கையானது, இனிப்பானது. அதுபோல் பனை ஓலையும் பயன் தரக்கூடியதாக உள்ளது. பனை மரம்; வீடு கட்டுவதற்கு உபயோகமாக இருக்கிறது. பெரிய அலை வந்தாலும் தடுக்கும் அளவிற்கு இருக்கும். கடந்த ஆண்டு அரசின் நடவடிக்கையால் 65 இலட்சம் பனை மரங்கள் நட்டு உள்ளனர்.
இது 25 வருடங்களுக்கு பிறகு நமக்கு பிறகு வரும் சந்ததியர்களுக்கு உபயோகமாக இருக்கும். காலநிலை மாற்றங்களுக்கு ஏற்றாற்போல் நாம் பல மரங்களை நட்டு வைக்க வேண்டும். ஏற்கனவே 1 இலட்சம் பனை விதைகளை சேகரித்துள்ளனர். நமது மாவட்டத்தில் குறைந்தபட்சம் நாம் 5 இலட்சம் மரங்களையாவது நட வேண்டும். இதன் முன்னெடுப்பாக தற்போது பனை விதைகள் சேகரிப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இப்பணிகளில் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தெரிவித்தார்
தொடர்ந்து, மீண்டும் மஞ்சப்பை திட்டம் கீழ் பொதுமக்களுக்கு மஞ்சப்பைகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார் இப்பனைவிதை சேகரிப்பு பணிகளில் தரங்கம்பாடி பொறையார் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் ஈடுபட்டனர்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வன அலுவலர் அபிசேக் தோமர் தரங்கம்பாடி பேரூராட்சி தலைவர் சுகுண சங்கரி குமரவேல் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் தமிழ்ஒளி, தரங்கம்பாடி பேரூராட்சி செயல் அலுவலர் கமலக்கண்ணன் மற்றும் அரசு அலுவலர்கள், கல்லூரி பேராசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
No comments