பத்ம விருதுக்கு விண்ணப்பித்தவர்களில் தகுதியான நபர்களை தேர்வு செய்வதற்கான ஆலோசனை கூட்டம் முதல்வர் ரங்கசாமி தலைமையில் நடைபெற்றது.
புதுச்சேரியில் பத்ம விருது வேண்டி விண்ணப்பித்தவர்களில் தகுதியான நபர்களை மத்திய அரசுக்கு பரிந்துரை செய்வதற்காக, அரசின் உயர்நிலை குழு ஆலோசனைக் கூட்டம் வணிகவரித்துறை வளாகத்தில் நடந்தது.
முதல்வர் ரங்கசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், தேனீ ஜெயக்குமார், துணை சபாநாயகர் ராஜவேலு மற்றும் தலைமை செயலர் சரத் சவுக்கான், அரசு செயலர் கேசவன், செய்தி விளம்பரத்துறை இயக்குநர் கலியபெருமாள் மற்றும் உயர்நிலை குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
- இரா.சரவணன் செய்தியாளர் புதுச்சேரி
No comments