Breaking News

தரங்கம்பாடி தாலுகாவில் சம்பா பருவத்திற்கான நெல் விதைப்பு பணி தீவிரம் பாரம்பரிய நெல் ரகங்களையும் விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர் போதிய தண்ணீர் இல்லாமல் மழையை நம்பி நெல் விதைப்பு பணி.


மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவில் ஒன்றியத்தில் விவசாயிகள் நடப்பு சம்பா பருவத்திற்கு தயாராகி உள்ளனர் விவசாயிகள் தங்கள் நிலத்தை உழுது தயார் செய்து தற்பொழுது நேரடி விதைப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் தரங்கம்பாடி தாலுக்காவில் பெரும்பாலும் ஒரு போக சாகுபடியையே விவசாயிகள் செய்து வருகின்றனர்.

முப்போகம் விளைந்த பூமி தற்போது ஒருபோக சாகுபடியாக மாறி உள்ளது போதிய தண்ணீர் இல்லாததால் மழையை நம்பி ஒருபோக சாகுபடி விவசாயிகள் செய்து வருகின்றனர் தற்பொழுது சம்பா சாகுபடியில் நேரடி விதைப்பு பணி நடைபெற்று வருகிறது காழியப்பநல்லூர் என் என் சாவடி தில்லையாடி திருவிடைக்கழி திருக்கடையூர் ஆக்கூர் காளகஸ்திநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் சம்பா சாகுபடி காழியப்பநல்லூர் என் என் சாவடி உள்ளிட்ட சில இடங்களில் விவசாயிகள் பாரம்பரிய நெல் ரகங்களான கருப்பு கவுனி கிச்சடி சம்பா சொர்ணசப் உள்ளிட்ட பாரம்பரிய நெல் ரகங்களை  விதைப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தங்களுக்கு போதிய ஆற்று பாசனம் மூலம் தண்ணீர் கிடைக்காததால் மழையை மட்டுமே நம்பி நெல் விதைப்பில் ஈடுபட்டு வருவதாக என் என் சாவடி விவசாயி பழனியப்பன் கூறுகின்றார் மேலும் தங்களுக்கு அரசு மற்றும் வேளாண்மை துறை மூலம் கிடைக்க வேண்டிய மானியம் உரம் பூச்சிக்கொல்லி மருந்துகள் வழங்குவதோடு தங்களுக்கு மகசூல் அதிகரிக்க தேவையான ஆலோசனைகள் வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

No comments

Copying is disabled on this page!