சமூகநீதி தினத்தை முன்னிட்டு தேனி மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் திரு R. சிவப்பிரசாத் இ .கா.ப., அவர்கள் தலைமையில் உறுதிமொழி ஏற்பு.
சமூகநீதி தினத்தை முன்னிட்டு தேனி மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் திரு R. சிவப்பிரசாத் இ .கா.ப., அவர்கள் தலைமையில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (CWC) திரு.N.சுகுமார் அவர்கள் காவல்துறையினர் மற்றும் அமைச்சு பொறியாளர்கள் இணைந்து பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும் என்ற அன்பு நெறியையும் - யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பண்பு நெறியையும் எனது வாழ்வியல் விதிமுறைகளை கடைபிடிப்பேன்!
சுயமரியாதை ஆளுமை திறனும் -பகுத்தறிவு பார்வையும் கொண்டவையாக என்னுடைய செயல்பாடுகள் அமையும்! சமத்துவம் , சகோதரத்துவம், சமதர்மம் ஆகிய கொள்கைகளுக்காக என்னை ஒப்படைத்துக் கொள்வேன்!
மானுடத்தின் மீது பற்றையும்மனிதாவ மானத்தையும் என்றும் போற்றுவேன். சமூக நீதியை அடித்தளமாகக் கொண்ட சமுதாயம் அமைத்திருந்த இந்த நாளில் உறுதியேற்கிறேன்! என்றும் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்றனர் மேலும் தேனி மாவட்டத்தில்உள்ள அனைத்து காவல் நிலையங்களும் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்றனர்.
No comments