Breaking News

மின் கட்டண பிரச்னையில் எதிர்க்கட்சியினர் அரசியல் செய்கின்றனர்' என அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.


புதுச்சேரியில் விழா ஒன்றில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நமச்சிவாயம், மின் கட்டண  விவகாரத்தில் எதிர்க்கட்சியினர் ஆளும் கட்சி மீது குறை சொல்ல வேண்டும் என்ற நோக்கில் செயல்படுகின்றனர். மக்களை திசை திருப்பி அதை சாதகமாக பயன்படுத்துவது அவர்களின் நோக்கமாக உள்ளது. இதனால் தான் தவறான தகவல்களை பரப்புகின்றனர். இதுதொடர்பாக விரிவான விளக்கத்தை ஓரிருநாளில் அளிப்பேன்.

மின்துறை தனியார்மயத்தை வைத்து எதிர்க்கட்சியினர் அரசியல் செய்ய நினைக்கின்றனர். தனியார்மயம் குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அரசியல் உள்நோக்கத்தோடு அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில், மீண்டும், மீண்டும் தனியார் மயம் பற்றி பேசி வருகின்றனர் என்றார்.

No comments

Copying is disabled on this page!