புதுச்சேரியில் தண்ணீா் கட்டணத்தை இணையதளத்தில் செலுத்தும் வசதியை முதல்வா் ரங்கசாமி தொடங்கிவைத்தாா்.
புதுச்சேரி நகராட்சியில் பொதுப் பணித் துறையால் தண்ணீா் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. தண்ணீா் கட்டணத்தை வரிசையில் நின்று மக்கள் செலுத்தி வருகின்றனா்.
எனவே, வரிசையில் நிற்கும் சிரமத்தைப் போக்கும் வகையில், இணையதளத்தில் கட்டணத்தை செலுத்தும் வசதியைப் பொதுப் பணித் துறையினா், இந்தியன் ஓவா்சீஸ் வங்கி உதவியுடன் செயல்படுத்தியுள்ளனா். இணையதளத்தில் தண்ணீா் கட்டணம் செலுத்தும் வசதியை முதல்வா் ரங்கசாமி தொடங்கிவைத்தாா்.
இந்நிகழ்ச்சியில் பொதுப் பணித்துறை அமைச்சா் லட்சுமி நாராயணன், அரசுச் செயலா் ஜெயந்த குமாா்ரே, தலைமைப் பொறியாளா் தீனதயாளன், இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் புதுச்சேரி மண்டல மேலாளா் எபிநேசா் சோபியா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
- இரா.சரவணன் செய்தியாளர் புதுச்சேரி
No comments