பொன்னேரி அருகே 3நாட்களுக்கு முன் காணாமல் போன மூதாட்டி மழைநீர் கால்வாயில் அழுகிய நிலையில் சடலமாக மீட்பு.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த கொக்குமேடு பகுதியில் உள்ள மழைநீர் கால்வாயில் நேற்றிரவு துர்நாற்றம் வீசியதால் அங்கு சென்று பார்த்தபோது பெண் சடலம் ஒன்று இருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொன்னேரி காவல்துறையினர் அழுகிய துர்நாற்றம் வீசிய நிலையில் கால்வாயில் கிடந்த சடலத்தை நீண்ட போராட்டத்திற்கு பிறகு மீட்டனர்.
தொடர்ந்து நடத்திய விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த மூதாட்டி ஒருவர் கடந்த 3 நாட்களுக்கு முன் காணாமல் போனதாக புகார் அளித்திருந்த நிலையில் அவர்கள் வரவழைக்கப்பட்டு அடையாளம் காணப்பட்டது. இதில் சடலமாக மீட்கப்பட்டவர் 3நாட்களுக்கு முன் காணாமல் போன மூதாட்டி கோகிலா (75) என்பது உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து பொன்னேரி போலீசார் சடலத்தை உடற்கூறு ஆய்விற்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments