Breaking News

சீர்காழி அருகே சென்னை- நாகப்பட்டினம் தேசிய சாலையில் இருபுறமும் அடர்ந்த கருவேல மரங்கள். 2 கி.மீ சாலையை அச்சத்துடன் கடக்கும் வாகன ஒட்டிகள்.


மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த சட்டநாதபுரம் ஊராட்சி வழியே சென்னை நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை NH 45A அமைந்துள்ளது. சென்னை, புதுச்சேரி, சிதம்பரம் பகுதியில் இருந்து காரைக்கால், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி என இருமார்த்திலும் சென்று வர பிரதான சாலையாகவும் இச்சாலை அமைந்துள்ளது. அதே போல் பூம்புகார், திருவெண்காடு, மங்கைமடம், திருவாலி உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் சீர்காழி நகர் பகுதிக்கு வந்து செல்லவும் இப்பகுதியை கடந்தே சென்று வரவேண்டும். இதனால் 24 மணி நேரமும் ஓய்வின்றி வாகனங்கள் சென்று வரும் சாலையாக இச்சாலை அமைந்துள்ளது. 

இந்நிலையில் சட்டநாதபுரத்தில் இருந்து சூரக்காடு வரையிலான இரண்டு கிலோமீட்டர் தொலைவிற்கும் சாலையின் இருபுறமும் கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளது. சாலையோரம் வளர்ந்த மரங்கள் வளைந்து தற்போது சாலையின் உள்ளே இரு புறமும் ஆக்கிரமிக்க துவங்கியுள்ளது. 

இதன் காரணமாக சாலையில் செல்லும் வாகனங்கள் சாலையின் இடது, வலது புறம் செல்ல முடியாமல் சாலையின் மையப்பகுதியில் மட்டுமே செல்கின்றன. இச்சாலையில் இருபுறமும் வாகனங்கள் வரும் பொழுது மையப்பகுதியில் செல்லும் நிலையில் விபத்து ஏற்படும் என்பதால் அச்சத்துடன் கடந்து செல்கின்றனர்.

24 மணி நேரமும் வாகன போக்குவரத்து கொண்ட தேசிய நெடுஞ்சாலையில் கருவேல மரங்கள் ஆக்கிரமைத்து வருவது வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்டுத்தி வருகிது. எனவே சாலையோரம் ஆபத்தான நிலையில் வளர்ந்துள்ள கருவேல மரங்களை விரைந்து அகற்ற வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments

Copying is disabled on this page!