Breaking News

வட்டார அளவிலான ஊட்டச்சத்து உணவுத் திருவிழாவில் சேர்வைக்காரன்மடம் ஊராட்சி வென்மலர் மகளிர் குழுவினர் முதல் பரிசு பெற்றனர்.


தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற வட்டார அளவிலான ஊட்டச்சத்து உணவுத் திருவிழாவில் சேர்வைக்காரன்மடம் ஊராட்சி வென்மலர் மகளிர் குழுவினர் முதல் பரிசு பெற்றனர்.

தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார அளவிலான ஊட்டச்சத்து உணவுத்திருவிழா நடைபெற்றது. தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குபட்ட வட்டார அளவில் நடைபெற்ற இந்த ஊட்டச்சத்து உணவுத்திருவிழா புதுக்கோட்டைய ஊராட்சி ஒன்றிய அலுவலகக்தில் நடைபெற்றது. 

விழாவில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மாணிக்கவாசகம் தலைமை வகித்தார். பானுமதி ஆகியோர் தலைமை வகித்தனர். வட்டார அளவில் நடைபெற்ற இந்த உணவுத் திருவிழாவில் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குபட்ட ஊராட்சிகளை சேர்ந்த 18 மகளிர் சுயஉதவிக்குழுவினர் கலந்து கொண்டனர். 

இதில், கம்பு, கேழ்வரகு, தினை, குதிரைவாலி, சாமை, மாப்பிள்ளை சம்பா அரிசியில் செய்யப்பட்ட ஆரோக்கியமான பாரம்பரிய உணவுகள் மற்றும் எள், வேர்கடலை மற்றும் சிறுதானியங்களில் செய்யப்பட்ட திண்பண்டங்கள் உள்ளிட்டவைகளை, தங்கள் கைவண்ணங்களில் சமைத்து கொண்டு வந்து காட்சிப்படுத்தினர். இதில், நடுவர்களாக செயல்பட்ட துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மாலா, சண்முகசுந்தரி மற்றும் செல்வராணி ஆகியோர் செயல்பட்டு சிறந்த மகளிர் குழுக்களை தேர்வு செய்தனர்.

அதில்,  சேர்வைக்காரன்மடம் ஊராட்சியை சேர்ந்த வெண்மலர் மகளிர் குழுவினர் முதல் பரிசை பெற்றனர். முடிவைத்தானேந்தல் ஊராட்சியை சேர்ந்த-வாடாமல்லி மகளிர் குழுவினர் இரண்டாம் பரிசினை பெற்றனர். குமாரகிரி ஊராட்சியை சேர்ந்த வளம் மகளிர் குழுவினர் மூன்றாம் பரிசு பெற்றனர்.

நிகழ்ச்சியில், வட்டார இயக்க மேலாளர் முத்துமாரி, வட்டார ஒருங்கிணைப்பாளர் பரிமளா, விஜயகுமாரி, மரிய அமலி, செல்வசுந்தரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

No comments

Copying is disabled on this page!