Breaking News

பயிர் காப்பீட்டு தொகை வழங்க கோரி ‌- கோவில்பட்டியில் தலையில் முக்காடு போட்டு, அக்னி சட்டி ஏந்தி நூதன போராட்டம்.


மழையினால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும், பாரபட்சம் இல்லாமல் பயிர் காப்பீட்டு தொகை வழங்க கோரி ‌- கோவில்பட்டியில் தலையில் முக்காடு போட்டு,  அக்னி சட்டி  ஏந்தி நூதன போராட்டம்.



தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் கடந்த டிசம்பர் மாதம் பெய்த பலத்த மழை காரணமாக விவசாயிகள் பயிரிட்டு இருந்த உளுந்து பாசி, மக்காச்சோளம், மிளகாய், நெல், வாழை உள்ளிட்ட பயிர்கள் முற்றிலுமாக சேதமடைந்தன. பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் முழுமையாக பயிர் காப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என்று ‌ காங்கிரஸ் கட்சி சார்பில் பலமுறை மனு அளிக்கப்பட்ட நிலையில், பயிர் காப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது.‌
 

அந்த பயிர் காப்பீட்டு தொகை வழங்கியதில் பல்வேறு குளறுபடிகள் உள்ளதாகவும், பாதிக்கப்பட்ட நிறைய விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு தொகை கிடைக்காத நிலை இருப்பதாகவும், எனவே பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் பாரபட்சமில்லாமல் 2023 -24ம் ஆண்டிற்கான பயிர் காப்பீட்டு தொகையை வழங்க வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியின் வடக்கு மாவட்ட துணைத் தலைவர் வழக்கறிஞர் அய்யலுசாமி, தலையில் முக்காடு போட்டு,  கையில் அக்கினி சட்டி ஏந்தி கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டார். 


மேலும் தங்களது கோரிக்கை மனுவினை கோட்டாட்சியர் மகாலட்சுமிடம் வழங்கினர். இதில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

No comments

Copying is disabled on this page!