உதயநிதி ஸ்டாலினுக்கு நோட்டீஸ் அனுப்பிய இயக்குனர் கோபி காந்தி.
சர்வதேச ஆர்.எஸ்.ஜி சமூக சேவை மைய நிறுவனர், தலைவர், திரைப்பட தயாரிப்பாளர், இயக்குனர், பாஜகவை சார்ந்த நடிகர் கோபி காந்தி வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது. தமிழக விளையாட்டு துறை அமைச்சர் திமுக உதயநிதி ஸ்டாலினிடம் கடந்த 28.01.2023 அன்று ஏழை, எளிய மற்றும் தமிழ்நாட்டு விளையாட்டு வீரர்களின் துயரங்களை களைய ஐந்து கோரிக்கைகளை முன் வைத்து மனு அளித்திருந்தேன்.
நான் அளித்த பல்லாயிர கணக்கான விளையாட்டில் சாதிக்க துடிக்கும் இளைஞர்களின் அந்த மனு மீது எடுத்துள்ள மேல் நடவடிக்கை குறித்து தகவல் அறியும் சட்டத்தின் கீழ் விளக்கம் கேட்டு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறைக்கு மனு அளித்திருந்தேன். அத்துறை அளித்துள்ள தகவலில் விளையாட்டு துறை அமைச்சர் திமுக உதயநிதி ஸ்டாலினிடம் 28.01.2023 நான் அளித்த மனு பெறப்படவில்லை என்று விளக்கமளித்துள்ளார்கள்.
முக்கிய அரசு பொறுப்பு வகிக்கும் துறை அமைச்சராகிய உதயநிதி ஸ்டாலின் பல்லாயிர கணக்கான விளையாட்டில் சாதிக்க துடிக்கும் இளைஞ்சர்களுக்கான பொதுநல மனுவை பெற்று கொண்டு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால், அனைத்து துறை சார்ந்தவர்களுக்கு முன்னுதாரணமாக திகழும் தாங்களே தவறு செய்யும் பட்சத்தில் தமிழகத்தில் தங்களுக்கு கீழ் பணி புரியும் அதிகாரிகள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை எப்படி சரியாக பணிபுரிவார்கள். மக்கள் வரிப்பணத்தில் மக்களுக்கான திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.
ஆனால் ஏழை, எளிய, பொது மக்களுக்கான மனுவையே தாங்கள் அரசு குறிப்பேட்டில் பதிவு செய்யவில்லை என்பது மிக மிக கண்டனத்துக்குரியதாகும். பொது மக்கள் ஒவ்வொருவரும் நன்றாக அறிந்து கொள்ளுங்கள். இது குறித்து விளக்கமளிக்க கேட்டு தமிழக விளையாட்டு துறை அமைச்சர் திமுக உதயநிதி ஸ்டாலினுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளேன்.
இவ்வாறு சர்வதேச ஆர்.எஸ்.ஜி சமூக சேவை மைய நிறுவனர், தலைவர், திரைப்பட தயாரிப்பாளர், இயக்குனர், பாஜகவை சார்ந்த நடிகர் கோபி காந்தி வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளார்.
No comments