Breaking News

வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் இல்லாத காரணத்தினால் நோயாளிகள் பாதிப்பு.


வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் இல்லாத காரணத்தினால் நோயாளிகள் பாதிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும் மருத்துவமனையில் போதிய  நவீன தொழில்நுட்ப மருத்துவ சிகிச்சை வழங்குவதற்கான வசதிகள் இல்லாத காரணத்தினால் விபத்து போன்ற பாதிப்பால் வரக்கூடிய நோயாளிகள் பெருமளவு வேலூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டு நேரம் விரயமாகி இன்னலுக்கு உள்ளாக்கப்படுவதாக கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி மருத்துவமனையில் சிடி ஸ்கேன் பல நாட்களில் பழுதடைந்து காணப்படுவதாக கூறப்படுகிறது எனவே மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் பற்றாக்குறையை போக்க வேண்டும் எனவும்  எம்ஆர்ஐ ஸ்கேன் வசதியை கொண்டு வர வேண்டும் எனவும் நவீன தொழில்நுட்ப மேல் சிகிச்சைகள்  வழங்கும் வகையில் அனைத்து மருத்துவ வசதிகளையும் வாலாஜா அரசு மருத்துவமனையிலேயே கொண்டு வர வேண்டும் என தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சிவாலாஜா நகர செயலாளர் பொன் மேஷக் மூர்த்தி தலைமையில் பத்துக்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தைகள் மனு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்வு கூட்டத்தில் பொதுமக்கள் கோரிக்கை மனுவினை வழங்கியுள்ளனர்.


இந்நிலையில்  தலைமை மருத்துவமனை இயங்கி வருகின்றன இங்கு  ஏராளமான ஏழை எளிய கூலி தொழிலாளி மக்கள்  500க்கும் மேற்பட்ட மக்கள் உள்  நோயாளிகளாகவும் 100க்கும் மேற்பட்ட மக்கள் புற நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை என்பதால் விபத்துக்குள்ளான நோயாளிகள் சிகிச்சைக்காக அனுமதி படுகின்றனர். இவ்வாறு அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படாமல் வேலூர் தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி சரியான சிகிச்சை அளிக்கப்படுவதில்லை மருத்துவர்கள் இல்லாத காரணத்தினால் சிகிச்சை அளிக்கப்படுவதில்லை  பல நேரங்களில். சரியான சிகிச்சை  சரியாக சிகிச்சை அளிப்பதில்லை  இல்லை  மருத்துவர்கள் பணியில் இல்லாத காரணத்தினால் சரியான சிகிச்சை அளிக்கப்படுவதில்லை என்றும்  மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பணி செய்யாததால் மருத்துவ அறிவும் இல்லாமல் தூய்மை பணியாளர்கள் பார்ப்பதோடு மருந்து மாத்திரைகள் பொதுமக்கள் தரப்பில் புகார்கள் எழுதி வருகிறது.  மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை சிகிச்சைக்காக வரும் நோயாளிகளுக்கு சிடி ஸ்கேன்   வசதி உள்ளது பல நேரங்களில் இயங்காமல் உள்ளது மருத்துவமனைக்கு எம் ஆர் ஐ ஸ்கேன். ஏற்படுத்தி தர  உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். 


இதேபோல்  ரேடியாலஜி எக்கோ இ என் டி   இருதய சிகிச்சை ஆகிய முக்கிய மருத்துவர்கள் நிரப்பப்படாமல் நோயாளிகள் அவதிக்குள்ளாகி வருவதாக மாவட்ட  மக்கள் சார்பாக கோரிக்கை வைக்கப்படுவதில்லை. மேலும் இதில் கலையரசன் இதய செல்வம் சக்கரவர்த்தி நாகேந்திரன் சுஜாதா மஞ்சுளா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

No comments

Copying is disabled on this page!