இந்திய அளவில் அனைத்து துறைகளிலும் முதலிடம் வகித்து நம்பர்-1 முதல்வராக மு.க.ஸ்டாலின் திகழ்கிறார் - ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிற்கினங்க, திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி, தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோரின் அறிவுறுத்தலின்பேரில், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தூத்துக்குடி மத்திய ஒன்றிய பொது உறுப்பினர்கள் கூட்டம், புதுக்கோட்டையில் நடைபெற்றது.
கூட்டத்தில் மத்திய ஒன்றிய செயலாளர் கே.கே.ஆர். ஜெயக்கொடி வரவேற்றார். அவைத்தலைவர் பாலசுந்தரம் தலைமை வகித்தார். துணைச் செயலாளர்கள் ஹரிபாலகிருஷ்ணன், ராஜ்குமார், ஏஞ்சலின் ஜெனிட்டா, பொருளாளர் ரமேஷ் விஜயகுமார், மாவட்ட பிரதிநிதிகள் நாகராஜன், வெயில்ராஜ், செல்வின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். அப்போது அவர் பேசுகையில்,
முதல்வர் மு.க.ஸ்டாலின் 2021ஆம் ஆண்டு ஆட்சி பொறுப்பேற்றத்தில் இருந்து தமிழ்நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்கிறார். குறிப்பாக பெண்களுக்காக நகர பேருந்துகளில் விடியல் பயணம், மகளிர் உரிமைத்தொகை, புதுமைப்பெண் திட்டம், மாணவர்களுக்கு உயர்கல்வி உதவித்தொகை, தமிழ் புதல்வன் திட்டம், பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவுத்திட்டம் என அனைத்து துறைகளிலும் முதலிடம் வகித்து இந்தியாவிலேயே தமிழகத்தை முன்னோடி மாநிலமாக மாற்றி, நம்பர்-1 முதல்வராக மு.க.ஸ்டாலின் திகழ்கிறார் என்றார்.
நிகழ்ச்சியில், மேற்கு ஒன்றிய செயலாளர் புதூர் சுப்பிரமணியம், மாவட்ட கவுன்சிலர் செல்வகுமார், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் அருண்குமார், சிறுபான்மை அணித் தலைவர் ராஜா ஸ்டாலின், ஆதிதிராவிட நலக்குழு துணை அமைப்பாளர் ராஜ், விளையாட்டு மேம்பாட்டு துணை அமைப்பாளர் ஜெயராஜ், வர்த்தக அணி துணை அமைப்பாளர் செல்வின் ஜெபக்குமார், தொண்டரணி துணை அமைப்பாளர் கபிரியேல் சைமன், மகளிர்அணி சமூக வளைதள பொறுப்பாளர் மீனாட்சி, துணை அமைப்பாளர் மரிய பொன்னம்மா, தொண்டரணி வளைதள பொறுப்பாளர் அன்னசெல்வி, ஒன்றிய வழக்கறிஞர் அணி அமைப்பாளர் மகேந்திரன், இளைஞரணி சண்முகநாராயணன், மாணவர் அணி சற்குணம், மகளிரணி வரலட்சுமி, மகளிர் தொண்டரணி விஜயபாரதி, விவசாய அணி ஹேம்நாத் ஜெகன், வர்ததக அணி பொன்செல்வன், தொழிலாளர்அணி மொபட் ராஜன், தொண்டரணி ஜெபராஜ் ஞானசீலன், கலைஇலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் பாலசுப்பிரமணியன், தகவல்தொழில்நுட்ப அணி மணிகண்டன், ஆதிதிராவிடர் நலக்குழு சவுந்திரபாண்டியன், மீனவர் அணி ஈஸ்டர்ராஜ், சிறுபான்மை நல அமைப்பாளர் தனசிங், பொறியாளர் அணி ஆல்வின்பரத், நெசவாளர் அணி ஜெயசிங் கிருபாகரன், இலக்கிய அணி அன்பரசன், சுற்றுச்சூழல் அணி சிவராஜ், அமைப்புச்சாரா அணி மகாலிங்கம், விளாயட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் மாரிமுத்து, விவசாய தொழிலாளர் அணி பால்ராஜ் மற்றும் கிளைச் செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை தலைவர் பொன்னரசு நன்றி கூறினார்.
No comments