Breaking News

பஞ்சப்பள்ளி அடுத்த நமாண்டஅள்ளி காலனி மக்களை கடந்த 4 ஆண்டுகளாக புறக்கணித்த கும்மனூர் ஊராட்சி மன்ற தலைவரால் அப்பகுதி மக்கள் கடும் பாதிப்பு.


தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு ஒன்றியம், கும்மனூர் ஊராட்சியில் உள்ள நமாண்டஅள்ளி  ஆதிதிராவிடர் காலணியில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியின் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் திமுகவை சேர்ந்த முருகன், ஊராட்சி மன்ற தேர்தலில் நமாண்டஅள்ளி காலணியை சேர்ந்தவர்கள் இவருக்கு ஓட்டு போடவில்லை என்பதால் கடந்த 4 வருடமாக இக்காலணி மக்களை புறக்கணித்து வருகிறார்.


இப்பகுதியில் அடிப்படை தேவைகளான குடிநீர், சாக்கடை, கால்வாய், பெண்கள் மற்றும் குழந்தைகள்  சுகாதார கழிப்பிடம் வளாகம், உள்ளிட்ட எந்த பரமாரிப்பு பணிகளும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை, இப்பகுதியில் இதுவரை கிராம சபா கூட்டம் கூட நடத்தப்படவில்லை என்றும் வீதியின் நடுவே உள்ள மின் கம்பத்தை கூட அகற்றாமல் அலட்சியம் காட்டி வருவதாகவும், மேலும் அப்பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வரும் நிலையில் அதனருகே உறுதியற்ற ஆபத்தான நிலையில், இலவம்பஞ்சு மரத்தின்  அடிப்பகுதி   இருப்பதால் எப்போது வேண்டுமானாலும், வேருடன்   பள்ளியின் மேல் சாய்ந்துவிழும் ஆபத்தான நிலை  உள்ளது, இது குறித்து பஞ்சாயத்து நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை கண்டுக் கொள்ளாத நிலையே தொடர்ந்து வருகிறது. எங்களை பழிவாங்கும் நோக்கில், நாங்கள் குடியிருக்கும் காலணிக்குள் சாக்கடை  கழிவுநீர் தேங்குமாறு சாக்கடை கால்வாயை கட்டியுள்ளார்.


எனவே எங்களின்  அடிப்படை தேவைகளை நிறைவேற்றாவிட்டால் ரேஷன் கார்டுகளை எரித்து மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என அப்பகுதி கிராமமக்கள் தெரிவித்தனர்.

No comments

Copying is disabled on this page!