புதுச்சேரியைச் சேர்ந்த செவிலியருக்கு சிறப்பாகப் பணியாற்றியதற்காக மத்திய அரசின் ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேல் விருது வழங்கப்பட்டது.
நாடு முழுவதிலும் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில், சிறப்பாகப் பணியாற்றும் செவிலியர்களைத் தேர்வு செய்து அவர்களை கௌரவப்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேல் விருதை மத்திய அரசின் சுகாதாரத்துறை வழங்கி வருகிறது.
அதன்படி 2024-ம் ஆண்டுக்கான ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேல் விருதுக்கு புதுச்சேரி செஞ்சி சாலையை சேர்ந்த கிராமப்புற செவிலியர் விஜயகுமாரியை தேர்வு செய்து ஜனாதிபதி திரவுபதி முர்மு விருது வழங்கி கௌரவித்துள்ளார்.
புதுச்சேரி சுகாதாரத்துறையில் கடந்த 28 ஆண்டுகளாகப் கிராமப்புறங்களில் பணியாற்றி வரும் விஜயகுமாரி, தற்போது தவளகுப்பம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கிராமப்புற செவிலியராகப் பணியாற்றி வருகிறார்.
இவர் தனது பணியை சிறப்பாகச் செய்ததுடன், ரத்த தானம், கண்தான விழிப்புணர்வு, கர்ப்பிணிகள் மற்றும் பிரசவித்த தாய்மார்களுக்குத் தேவையான விழிப்புணர்வு, சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்கான விழிப்புணர்வு உள்ளிட்ட செயல்பாடுகளில் தங்களது பங்களிப்பை சிறப்பாகச் செய்திருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறது. மத்திய அரசின் சுகாதாரத்துறை.
- இரா.சரவணன் செய்தியாளர் புதுச்சேரி
No comments