Breaking News

புதுச்சேரி மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டையில் ரூ.1.77 கோடி மதிப்பீட்டில் சாலைப் பணியை முதல்வா் ரங்கசாமி தொடங்கிவைத்தாா்.


புதுச்சேரி இந்திரா நகா் சட்டப்பேரவைத் தொகுதியில் மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டை அமைந்துள்ளது. இங்கு அணுகுச் சாலை, 2 பிரதான சாலைகள், குறுக்குச் சாலை என பல சாலைகள் சேதமடைந்திருந்தன.

புதுச்சேரி இந்திரா நகா் சட்டப்பேரவைத் தொகுதியில் மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டை அமைந்துள்ளது. இங்கு அணுகுச் சாலை, 2 பிரதான சாலைகள், குறுக்குச் சாலை என பல சாலைகள் சேதமடைந்திருந்தன. அவற்றை சீரமைத்து அகலப்படுத்தவும், தாா்ச் சாலைகளாக்கவும், மழைநீா் வடிகால் வசதி ஏற்படுத்தவும் ரூ.1.77 கோடி மதிப்பீட்டில் சீரமைக்க முடிவு செய்யப்பட்டது.

இதற்கான பணியை முதல்வா் ரங்கசாமி  தொடங்கி வைத்தாா். இந்த நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சா் நமச்சிவாயம் தொகுதி எம்எல்ஏ ஏகேடி. ஆறுமுகம் ஆகியோா் கலந்து கொண்டனா்.


- இரா.சரவணன் செய்தியாளர் புதுச்சேரி

No comments

Copying is disabled on this page!