சீர்காழி புதிய வட்டாட்சியராக அருள்ஜோதி என்பவர் பொறுப்பேற்றுக் கொண்டார்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்தில் சீர்காழி புதிய வட்டாட்சியராக ஆர். அருள்ஜோதி பொறுப்பேற்று கொண்டார் இவர் இதற்கு முன்பு தேசிய நெடுஞ்சாலை nh45 ஏ நில எடுப்பு வட்டாட்சியராக பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் சீர்காழி வட்டாட்சியராக பணியாற்றி வந்த இளங்கோவன் என்பவர் பணி ஓய்வு பெற்றதால் தற்பொழுது சீர்காழி புதிய வட்டாட்சியராக ஆர். அருள்ஜோதி பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். அவருக்கு வட்டாட்சியர் அலுவலக அதிகாரிகள், ஊழியர்கள், வருவாய்த்துறையினர் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
No comments