திருச்செந்தூரில் ஒன்றிய இணை அமைச்சர் எல். முருகன் புதிய உறுப்பினர் சேர்க்கைக்காக வருகை தந்தார்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் இன்று ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் புதிய உறுப்பினர் சேர்க்கைக்காக வருகை தந்தார். அவர் திருச்செந்தூரில் உள்ள மெயின்ரோடு வழியாக சென்று ஒவ்வொரு கடைகளுக்கும் சென்று ஆன்லைன் மூலம் புதிய உறுப்பினர் சேர்க்கையை மேற்கொண்டார்.
அப்போது அவரை தொடர்ந்த பாஜக தொண்டர்கள் வந்த வாகனத்தால் சாலை முழுவதும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. ஆனால் அதைப்பற்றி கண்டு கொள்ளாத எல்.முருகன் ஒவ்வொரு கடைகளாக சென்று, போட்டோவிற்கு போஸ்கொடுத்துக்கொண்டிருந்தார். இதனால் வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
- திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர் பெ.முகேஷ்
No comments