Breaking News

அண்ணா கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்ட நாள் விழா.


கிருஷ்ணகிரி அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்ட   நாளினை  முன்னிட்டு  சிறப்பு விழா   இன்று நடைபெற்றது . கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் முனைவர் மா. ஜெகன் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். கல்லூரியின் முதல்வர் முனைவர் சு. தனபால் அவர்கள் தலைமை தாங்கினார். தன்னுடைய தலைமை உரையில்,  மாணவ மாணவியர் கல்லூரி பருவத்தில்  நிறைய மரங்களை நடுதல் வேண்டும். மரங்களை நடுவதன் மூலம்  மழை  வளத்தைப்  பெருக்க முடியும்.  இயற்கை வளத்தை  பேணி பாதுகாத்தல் வேண்டும் .  

பிளாஸ்டிக்  பொருட்களை ஒழித்தல் வேண்டும்.  அன்றாட வாழ்வில் மஞ்சள்  பையினை  மாணவ மாணவியர்  பயன்படுத்துதல் வேண்டும்  என்று பேசினார்.  விழாவில் சிறப்பு  விருந்தினர்களாக  கிருஷ்ணகிரி மாவட்ட வனச்சரக அலுவலர்  திரு. சக்திவேல்  திரு .மகேந்திரன்  திரு சிவா மற்றும்  வனவர்கள் பலர் பங்கேற்றனர்.  விழாவின் நிகழ்வினை  வேதியியல் துறை தலைவர் இரா சிவகுமார் தொகுத்து வழங்கினார். தூய்மை பாரத இந்தியா  உறுதிமொழியினை  கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்  இரா. இராமமூர்த்தி அவர்கள் கூற, மாணவ மாணவியர் உறுதி மொழியை ஏற்றுக் கொண்டனர். 

விழாவின் இறுதியாக சுமார் 100 மரக்கன்றுகள் நாட்டு நலப்பணித்  திட்ட மாணவர் மற்றும் வனத்துறையினர் இணைந்து  நட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.விழாவிற்கான ஏற்பாடுகளை இரா. சரவணக்குமார்  சிறப்பாகச்  செய்தார். விழாவின் நிறைவாக  நாட்டு நலப்பணித்திட்ட அலுவலக கே. இராமமூர்த்தி  அவர்கள் நன்றி கூற விழா   இனிதே நிறைவு பெற்றது.

No comments

Copying is disabled on this page!