சீர்காழி அடுத்த திருப்புங்கூர் நந்தனாருக்காக நந்தி விலகி நின்ற தளத்தில் நந்தனார் குருபூஜை விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அடுத்த திருப்புங்கூர் கிராமத்தில் நந்தனாருக்காக நந்தி விலங்கி நின்ற ஸ்தலமான விளங்கக்கூடிய சௌந்தரநாயகி அம்பாள் சமேத சிவலோகநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது. தேவாரப் பாடல் பெற்ற இத் தளத்தில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் நந்தனார் குருபூஜை விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம் இவ்வாண்டு இக் கோவிலில் திருப்பணிகள் நடைபெறுவதால் நந்தனார் குருபூஜை விழா எளிமையாக கோவில் வளாகத்திலே நடைபெற்றது.
காலை நந்தனாருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து மலர்களால் அலங்காரம் செய்து தீபாரதனை நடைபெற்றன. தொடர்ந்து மாலை சிவவாத்தியங்கள் மற்றும் மங்கள வாத்தியம் முழங்க சிவனடியார்கள் சிவ தாண்டவம் ஆடினர்.ஐந்து கதவுகள் திறந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டு நந்தனாருக்கு சிவபெருமான் காட்சியளிக்கும் நிகழ்வு நடைபெற்றது.
இதில் உள்ளுர் மற்றும் வெளியூர் பக்தர்கள் மற்றும் சிவனடியார்கள் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் சுவாமிக்கு நெய் வைத்தியம் செய்த பிரசாதங்கள் வழங்கப்பட்டனர்.
No comments