Breaking News

ஏலகிரி மலை தொன் போஸ்கோ கல்லூரியில் தேசிய தரச் சான்று அவை மதிப்பிட்டு குழு ஆய்வு


திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை தொன் போஸ்கோ கல்லூரி (இருபாலர்) தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவை மதிப்பீட்டு குழு வருகை (29/08/2024 - 30/08/2024)தேசிய அளவில் கல்லூரியின் தரம் மற்றும் மாணவர்களுக்கு பயிற்றுவிக்கும் முறை, கல்லூரியில் மாணவர்கள் பயிலுவதற்கு தேவையான வசதிகள், விடுதிகளின் அமைப்பு. மாணவர்களுக்கு பயிற்றுவிக்கும் முறைகளில் கணினியின் ஈடுபாடு எந்த அளவிற்கு கையாளப்பட்டுள்ளது.


மேலும் வெளியேறிய மாணவர்கள் எந்த எந்த உயர்ந்த நிறுவனங்களில் பணியாற்றுகிறார்கள். சுய தோழில் முனைவோராக எத்தனை மாணவர்கள் உருவாகியுள்ளார்கள் என்பது போன்று கல்லூரியின் அனைத்து அம்சங்களும் சீராக உள்ளதா என தர மதிப்பீடு செய்வதற்காக தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவையின் மூலமாக மூன்று நபர்கள் தேர்வு செய்யப்பட்டு நம் ஏலகிரி மலை தொன் போஸ்கோ கல்லூரியிற்கு வருகைப்புரிந்தார்கள். இந்த தர மதிப்பீட்டு குழு 29/08/2024 மற்றும் 30/08/2024 என இரண்டு நாட்கள் தங்கி நம் கல்லூரியின் செயல்பாடுகள் தரம் மாணவர்கள் படிப்பதற்கு உரிய சூழல் என அனைத்தையும் முழுமையாக ஆய்வு மேற்கொண்டனர். 


பேராசிரியர் முனைவர் நடராசன். பேராசிரியர் முனைவர் ரேனுகா தாகூர் மற்றும் பேராசிரியர் முனைவர் சுகில் குமார் தோமர் என வெவ்வேறு பகுதிகளில் இருந்து இம் மூன்று நபர்களும் ஒருங்கே வந்து இங்கு ஏலகிரி மலையில் அமைந்து உள்ள  கல்லூரியின் நிர்வாகம், ஆசிரயர்களின் பயிற்றுவிக்கும் முறை, கடந்த ஐந்தாண்டுகளில் கல்லூரியில் படித்த மாணவர்கள் எட்டிய இலக்குகள் கல்லூரியில் படிப்பதற்கான சுற்றுச்சூழல் என அனைத்தையும் மதிப்பீடு செய்தார்கள். முதல் நாள்(29/08/2024) நம் கல்லூரியில் உள்ள துறைகளுக்கு சென்று மதிப்பீடு செய்தார்கள், துறை செயல்பாடுகள் மாணவர்களுக்கு கற்பிக்கப்படும் முறைகள், கற்பித்தலில் மாணவர்களை மையப்படுத்தி கற்பித்தல் என்றவாறு ஆய்வு நடைபெற்றது. 


அன்று நம் கல்லூரியல் உள்ள குழுக்கள் மற்றும் அமைப்புகள் இந்நாள் வரை தங்கள் அமைப்புகள் வழியாக செய்த நிகழ்ச்சிகள், போட்டிகள், கருத்தரங்குகள், முகாம்கள், விழிப்புணர்வு மற்றும் வீதி நாடகங்கள் என நிகழ்ந்த அனைத்தையும் அப்துல் கலாம் அரங்கத்தில் பார்வைக்காக கலை நயத்துடன் அலங்கரித்து வைத்தனர். 


வந்த மதிப்பீட்டாளர்கள் அந்த அமைப்புகளின் காட்சிப்படுத்துதலை கண்டு அகமகிழ்ந்தார்கள். அன்று மாலை மாணவர்களால் கலை நிகழ்ச்சி நிகழ்ந்தேரியது. மாணவர்களின் கல்வி, கலை மற்றும் சமுகத்திற்கு என அனைத்து திசைகளிலும் செயலாற்றுவதை கண்டு மகிழ்ச்சி அடைந்தார்கள். 


இரண்டாவது நாள்(30/08/2024) கல்லூரியின் சூழல் மற்றும் இயற்கை அமைப்பு வடுதிநிலை ஆராய்ச்சி மாணவர்கள் இயங்கும் விதம் என அனைத்தையும் ஆய்வு செய்தார்கள். பேராசிரியர்களுடன் இறுதியாக இந்த ஆய்வுக்கூட்டம் முடிவிற்கு வந்தது. இதில் ஆய்வில் கலந்துக்கொண்ட அனைவரும் தங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொண்டார்கள்.


இக்கல்லூரியின் செயலர் மற்றும் இல்லத்தந்தை போஸ்கோ அகஸ்டின் அவர்கள் இந்த ஆய்வுக்கூடம் ஈடேறுவதற்கு உழைப்பை நல்கிய அனைவரையும் பாராட்டினார். இக்கல்லூரியின் முதல்வர் முனைவர் ததேயூஸ் அவர்கள் கல்லூரியின் தொடக்க காலத்தில் இருந்து அயராது உழைத்துள்ளார் அவரின் கடின உழைப்பும் ஆசிரியர்களின் ஒத்துழைப்பும் மாணவர்களின் பங்கேற்பும் இக்கூட்டம் சிறப்பாக முடிவுற காரணமாகும். 


மேலும் இதற்கு தங்களது அயராத ஒத்துழைப்பை நல்கிய துணை முதல்வர்கள் அருட்தந்தை ஹென்றி மற்றும் முனைவர் ராஜேந்திரன், அருட்தந்தை சேவியர், அருட்தந்தை சார்லஸ் கிரேஸ். முனைவர் ராதாகிருஷ்ணன் உள் தர உறுதிப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் என அனைவருக்கும் தனது நன்றிகளையும் பாராட்டுகளையும் பகிர்ந்துக் கொண்டார்.

No comments

Copying is disabled on this page!