புதுச்சேரி அடுத்த பட்டாணுர் சுங்கச்சாவடியில் கட்டணம் குறைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் உள்ள சுங்கச்சாவடிகளில் இன்று முதல் சுங்க கட்டணம் உயரும் என அரசு அறிவித்த நிலையில் பல்வேறு இடங்களில் இன்று முதல் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது எனவே விழுப்புரம் மாவட்டம் பட்டானுர் சுங்கச்சாவடியில் கட்டண உயர்வுக்கு மாறாக கட்டண குறைவு அமலுக்கு வந்தது இந்நிலையில் கார்களுக்கு வசூலிக்கப்பட்ட 85 ரூபாய் 80 ஆக குறைக்கப்பட்டுள்ளது. கனரக வாகனங்களுக்கான கட்டணம் 255 ரூபாயில் இருந்து 250 ஆக குறைந்துள்ளது சுங்க சாவடிக்கு உள்ள தூரத்தை கணக்கிட்டு இந்த கட்டண குறைப்பு என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர் மேலும் இந்த கட்டண குறைவு அமலுக்கு வந்தது வாகன ஓட்டிகளுக்கு இடையே மகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
- இரா. சரவணன் செய்தியாளர் புதுச்சேரி..
No comments