"பாரத ரத்னா" அன்னை தெரேசா நினைவு தினத்தையொட்டி பாரதி பூங்காவில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர் லட்சுமி நாராயணன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
புதுச்சேரி அரசு சார்பில் "பாரத ரத்னா" அன்னை தெரேசா 27வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி, பாரதி பூங்காவில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், அரசு கொறடா ஏகேடி ஆறுமுகம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் கேஎஸ்பி ரமேஷ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
அதனைத் தொடர்ந்து அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் நிர்வாகிகள் மற்றும் புதுச்சேரி - கடலூர் உயர்மறை மாவட்ட பேராயர் பிரான்சிஸ் காலிஸ்ட் உட்பட கிறிஸ்தவ அமைப்பை சார்ந்த நிர்வாகிகள் மற்றும் தன்னார்வலர்கள் அன்னை தெரசா சிலைக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்கள்.
- இரா.சரவணன் செய்தியாளர் புதுச்சேரி
No comments