ஆழ்வார்திருநகரி அருகே ஆட்டு வியாபாரி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் தேசிய சாலையில் 500க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டம்!.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள பன்னம்பாறையைச் சேர்ந்தவர் சண்முகம் மகன் சுடலை(55). இவர் 200க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் செம்மறி ஆடுகளை மேய்ச்சலுக்காக ஆழ்வார்திருநகரி அருகே உள்ள தேமாங்குளம் வயல்வெளியில் பட்டி வைத்து வளர்த்து வந்த நிலையில் நேற்று அவர் முகத்தில் வெட்டு காயங்களுடன் கொலை செய்யப்பட்டு உயிரிழந்து கிடந்தார். இந்த சம்பவம் தொடர்பாக ஆழ்வார்திருநகரி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது பனனம்பாறை பகுதியில் நாகர்கோவில் - திருச்செந்தூர் பிரதான தேசிய சாலையில் கொலை குற்றவாளியை கைது செய்ய வேண்டி வலியுறுத்தியும், இதில் உயிரிழந்த சுடலையின் குடும்பத்திற்கு அரசு வேலை மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் அந்த கிராமத்தை சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக சாத்தான்குளம் டிஎஸ்பி சுபக்குமார் தலைமையிலான போலீசார் அங்கு குவிக்கப்பட்டு போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
No comments