பாலக்கோடு பேரூராட்சியில் மாதாந்திர கவுன்சிலர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பேருராட்சி அலுவலகத்தில் கவுன்சிலர்கள் ஆலோசனை கூட்டம் பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி தலைமையில் நடைப்பெற்றது. இக்கூட்டத்திற்கு செயல் அலுவலர் இந்துமதி முன்னிலை வகித்தார்.
இக்கூட்டத்தில் வரவு செலவு கணக்குகள் சமர்ப்பிக்கப்பட்டது. அதையடுத்து நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தாமதமாக செலுத்தும் சொத்துவரி, குடிநீர் வரி, ஆகியவற்றிற்க்கு ஒரு சதவீதம் வட்டி விதிக்க விவாதிக்கப்பட்டது. 15 வது நிதிக்குழு மானியம் மற்றும் 6 வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் பல்வேறு அடிப்படை வசதிகள் மேற்கொள்வது, பாலக்கோடு பேரூராட்சி நகர பகுதியில் பிளாஸ்டிக் அதிகரிப்பை கட்டுப்படுத்துவது, பருவ மழை தொடங்க உள்ளதால் சாக்கடை கால்வாய்களை தூர் வாரி கொசு மருந்து தெளிப்பது, அரசின் மூலதனமானிய நிதியிலிருந்து பேரூராட்சிக்கு புதிய கட்டிடம் கட்டும் பணி துவங்குதல், உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி கவுன்சிலர்கள், துப்புரவு ஆய்வாளர் ரவீந்திரன், டெக்னிசியன், அலுவலர்கள், தூய்மை காவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிவில் துணைத் தலைவர் தாஹசீனா இதாயத்துல்லா நன்றி தெரிவித்தார்.
No comments