Breaking News

டாஸ்மாக் மேற்பார்வையாளர் கண்ணில் மிளகாய் பொடியை தூவி 6 பேர் கொண்ட கும்பல் பேக்கை பறித்து சென்ற சம்பவம்.


மயிலாடுதுறையில் டாஸ்மாக் விற்பனையை முடித்துவிட்டு  இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குச் சென்ற  டாஸ்மாக் மேற்பார்வையாளர் கண்ணில் மிளகாய் பொடியை தூவி 6 பேர் கொண்ட கும்பல் பேக்கை பறித்து சென்ற சம்பவம் குறித்து மயிலாடுதுறை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.



மயிலாடுதுறை பேருந்துநிலையம் அருகே பஜனை மடம் சந்து பகுதியில் 5609 என்ற நம்பரைக் கொண்ட டாஸ்மாக் மதுபான கடை இயங்கி வருகிறது. இந்தக் கடையின் மேற்பார்வையாளாராக துர்காபரமேஸ்வரி நகரை சேர்ந்த ரமேஷ்குமார் என்பவர் பணியாற்றி வருகிறார். 


நாள்தோறும் இவர்  இரவு கடையை மூடிவிட்டு கணக்கு முடித்துவிட்டு இரவு 11.30மணிக்கு கையில் பேக்குடன் வீட்டிற்கு செல்வது வாடிக்கை.  இந்நிலையில் நேற்று இரவு 10 மணிக்கு கடையை மூடிவிட்டு கணக்கு பார்த்த பின்னர் 11:30 மணிக்கு  ரமேஷ் குமார் தனது இருசக்கர வாகனத்தில்  வீட்டிற்கு புறப்பட்டு சென்றுள்ளார். 


சேந்தங்குடி ஆர்ச் அருகே  பின்னால் இருந்து 3 இருசக்கர வாகனத்தில் வந்த 6 மர்ம நபர்கள் அடங்கிய கும்பல்  ரமேஷ் குமார் கண்களில் மிளகாய் பொடியை தூவி உள்ளனர். இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த ரமேஷ்குமாரிடமிருந்த பேக்கை எடுத்து கொண்டு மர்ம நபர்கள் தப்பி சென்றுள்ளனர். 


பேக்கில் லேப்டாப்பும் டாஸ்மாக் கடையின் கணக்கு புத்தகமும் இருந்ததாக தெரிவித்த ரமேஷ்குமார் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் விசாரண மேற்கொண்ட  போலீசார் ரமேஷ்குமார் கையில் டாஸ்மாக் பணத்தை எடுத்து வருவதாக நினைத்து மர்ம நபர்கள் பேக்கை திருடி சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். 


டாஸ்மாக் மேற்பார்வையாளர் முகத்தில் மிளகாய்பொடி தூவி பேக்கை பறித்து சென்ற சம்பவம் மயிலாடுதுறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments

Copying is disabled on this page!