குத்தாலத்தில் ஓய்வுபெற்ற தமிழ் ஆசிரியர் வீட்டில் புகுந்து அவரை தாக்கி கத்தியை காட்டி மிரட்டி ரூ. 20 ஆயிரம் பணம் பறிப்பு.
குத்தாலத்தில் ஓய்வுபெற்ற தமிழ் ஆசிரியர் வீட்டில் புகுந்து அவரை தாக்கி கத்தியை காட்டி மிரட்டி ரூ. 20 ஆயிரம் பணம் பறித்து கொண்டு மர்ம நபர்கள் தப்பியோடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு. 2 சிறுவர்கள் உள்ளிட்ட 3 பேரை கைது செய்து இளைஞர் ஒருவரை குத்தாலம் போலீசார் தேடி வருகின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் புது நகரை சேர்ந்தவர் கலைவேந்தர் (86)ஓய்வு பெற்ற தமிழாசிரியர். நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் நூல்களை எழுதியுள்ள இவர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 7ம்தேதி பட்டப்பகலில் மர்ம நபர்கள் ஆசிரியர் வீட்டின் உள்ளே புகுந்து கத்தியை காட்டி மிரட்டி அவரை தாக்கி பீரோவில் இருந்த ரூ. 20 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். பட்டப் பகலில் மர்மநபர்கள் தெருவில் நடமாடி ஆசிரியர் வீட்டுக்கு செல்வதும் தொடர்ந்து அங்கே கொள்ளை அடித்து விட்டு தப்பி வெளியே ஓடும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இச்சம்பவம் குறித்து கலைவேந்தர் அளித்த புகாரின் பேரில் குத்தாலம் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்ததுடன் சிசிடிவி கேமரா, காட்சிகளின் அடிப்படையில் தமிழாசிரியரை தாக்கிவிட்டு பணத்தை திருடிச்சென்ற குத்தாலம் பஞ்சுக்காரசெட்டித்தெருவை சேர்ந்த விக்னேஷ்(28), மற்றும் நடுசெட்டித்தெருவை சேர்ந்த சிறுவர்கள் வனராஜன் மகன் ஶ்ரீஹரி(15), பெருமாள் மகன் ஹரிஹரன்(14) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
சிறுவர்களை தஞ்சை சீர்திருத்த பள்ளியிலும், விக்னேஷ்சை சிறையிலும் அடைத்த போலீசார் தலைமறைவான அஜய் என்ற இளைஞரை தேடிவருகின்றனர்.
No comments