புதுச்சேரியில் நவீன ஸ்பீடு ரேடார் கன் மூலம் அதிவேக வாகனங்களுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தனர்.
புதுச்சேரியில் போக்குவரத்து விதிமீறல் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கும் வகையில் போக்குவரத்து போலீசார் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.அதன் ஒரு பகுதியாக அதிவேகமாக செல்லும் வாகன ஓட்டிகளை நவீன ஸ்பீடு ரேடார் கன் மூலம் கண்டறிந்து அபாரதம் விதிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, கோரிமேடு போக்குவரத்து காவல்துறை இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு தலைமையில் போக்குவரத்து போலீசார் லாஸ்பேட்டை இ.சி.ஆர் சாலையில் ஸ்பீடு ரேடார் கன் மூலம் அதிவேக வாகன ஓட்டிகளை கண்டறிந்தனர், அதிவேகமாக வந்த 100கும் மேற்பட்ட வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்தனர். அதில் கனரக வாகனங்களுக்கு 2 ஆயிரம் மற்ற வாகனங்களுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.
No comments