Breaking News

புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதியில் குடியிருப்புகளுக்கு மத்தியில் தங்கும் விடுதிக்கு அனுமதி அளித்ததற்கு தொகுதி எம்எல்ஏ நேரு எதிர்ப்பு.


புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதியில் குடியிருப்புகளுக்கு மத்தியில் தங்கும் விடுதிக்கு அனுமதி அளித்ததற்கு தொகுதி எம்எல்ஏ நேரு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட  அம்மன் கோவில் வீதியில் புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது. அதில் தங்கும் விடுதி அமைப்பதற்கான பணிகள் நடைபெற்றுவருகின்றன. மேலும், தங்கும் விடுதிக்கான அனுமதியை நகராட்சி உள்ளிட்டவை வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆனால், அப்பகுதியில் தங்கும் விடுதி அமைத்தால்,தங்களது அமைதி பாதிக்கப்படும் என கூறி அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட கட்டடத்தை முற்றுகையிட்டனா். இதுகுறித்து  தகவலறிந்த எம்எல்ஏ நேரு அங்கு வந்து அப்பகுதி மக்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

மேலும்,புதுச்சேரி நகராட்சி ஆணையா் கந்தசாமி மற்றும் உருளையன்பேட்டை காவல் ஆய்வாளா் உள்ளிட்டோரை சந்தித்துப் பேசினா். அப்போது பொதுமக்களுக்கு இடைஞ்சலாக உள்ள விடுதிக்கு அனுமதி தர எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது. மக்களின் கோரிக்கையை பரிசீலனை செய்வதாக அதிகாரிகள் தெரிவித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.


- இரா.சரவணன் செய்தியாளர் புதுச்சேரி

No comments

Copying is disabled on this page!