தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு மேற்கொண்டார்.
அதேபோல், மாநகரில் சில பகுதிகளில் குடிநீர் வால்வு மற்றும் கழிவுநீர் மூடி ஆகியவை சாலை மட்டத்தை விட உயரமாக உள்ளதால் போக்குவரத்துக்கு இடையூறாகவும், இதனால் சாலை விபத்துகள் ஏற்படுவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர். அதனைத்தொடர்ந்து அந்தோணியார் ஆலயம், தந்தி ஆபிஸ் சாலை பகுதியில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு மேற்கொண்டு உடனடியாக சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மாநகராட்சி 12வது வார்டுக்குட்பட்ட ஸ்டேட் பேங்க் காலனி, கோமதி பாய் காலனி ஆகிய பகுதிகளில் உள்ள கழிவு நீர் கால்வாய்களை வடகிழக்கு பருவமழைக்காலத்திற்குள் செய்ய வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்தும் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு மேற்கொண்டார்.
இந்நிகழ்ச்சிகளில் மாநகராட்சி ஆணையர் மதுபாலன், மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், போல் பேட்டை பகுதி செயலாளர் ஜெயக்குமார், சுரேஷ்குமார், கவுன்சிலர்கள் தெய்வேந்திரன், பொன்னப்பன் பேபி ஏஞ்சலின், வட்டச் செயலாளர்கள் சந்தனமாரிமுத்து, பொன்ராஜ், கங்காராஜேஷ், வட்ட பிரதிநிதிகள் திலகர், பாஸ்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments