அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை துணை முதல்வராக நியமிக்கபட வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றிய திருவள்ளூர் மாவட்ட திமுக.
திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக பொதுக்குழு உறுப்பினர்களுக்கான கூட்டம் திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளரும், திருத்தணி சட்டமன்ற உறுப்பினருனான எஸ் சந்திரன் தலைமையில் கூட்டம் நடத்தப்பட்டது.
இந்த கூட்டத்தில் பேசிய திமுக மேற்கு மாவட்டச் செயலாளர் எஸ்.சந்திரன் எம் எல் ஏ முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்ற வேண்டுமென தீர்மானங்களை வாசித்தார். அதில் முதலாவது தீர்மானமாக திமுக இளைஞர் அணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களை துணை முதல்வராக நியமிக்கபட வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்தத் தீர்மானத்திற்கு கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் உற்சாகத்தோடு கைத்தட்டி தீர்மானத்தை வரவேற்றனர். இந்தக் கூட்டத்தில் அரக்கோண நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் ஜெகத்ரட்சகன், சட்டமன்ற உறுப்பினர் விஜி ராஜேந்திரன், மாவட்ட அவை தலைவர் திராவிட பக்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments