புதுவை உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பிறந்தநாள் விழா.
புதுவை உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு காட்டாரிக்குப்பம் பாஜக சார்பில் பொய்யா விநாயகர் ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
அமைச்சர் நமச்சிவாயம் பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு புதுச்சேரி முழுவதும் அவரது ஆதரவாளர்கள் பல்வேறு இடங்களில் நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கி கொண்டாடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக மண்ணாடிப்பட்டு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காட்டேரிக்குப்பம் பகுதியில் அமைந்துள்ள பொய்யா விநாயகர் ஆலயத்தில் பாஜக சார்பில் அமைச்சரின் பெயரில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளாக இலவச சேலைகளை வழங்கி தொடங்கி வைத்தார்.
- இரா.சரவணன் செய்தியாளர் புதுச்சேரி
No comments