நீதிமன்ற வழக்கு முடிந்த பின் காவல்துறையில் 60 சப் இன்ஸ்பெக்டர்கள் பணியிடங்கள் நிரப்பப்படும் என அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி காவல்துறை செயல்பாடுகள் தொடர்பாக போலீஸ் அதிகாரிகளுடன், ஆலோசனை கூட்டம் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தலைமையில் காவல்துறை தலைமையகத்தில் நடைபெற்றது. மேலும்,சைபர் கிரைமில் தொடர்ந்து பல்வேறு இடங்களில் குற்றம் புரிந்த கும்பலை பிடித்த சைபர் கிரைம் போலீசாரை, அமைச்சர் நமச்சிவாயம் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நமச்சிவாயம், புதுச்சேரியில் 34 இடங்களில் புதிய போக்குவரத்து சிக்னல்கள் அமைக்கப்பட்டுள்ளது. நகரை கண்காணிக்க 17 இடங்களில் சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்தப்பட்டு அவற்றை செயல்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. போக்குவரத்து மிகுந்த இடங்களில் மேம்பாலங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நீதிமன்ற வழக்கு முடிந்த பின் 60 சப்-இன்ஸ்பெக்டர்கள் பணியிடம் நிரப்பப்படும் என்றார்.
- இரா.சரவணன் செய்தியாளர் புதுச்சேரி
No comments