Breaking News

புதுச்சேரி உள்துறை அமைச்சரின் பிறந்தநாளை ஒட்டி திருநள்ளாற்றில் ஏழை எளிய மக்களுக்கு புடவை மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.


புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தின் பிறந்தநாள் விழா வரும் எட்டாம் தேதி கொண்டாடப்பட உள்ளது இந்நிலையில் இன்று காரைக்கால் வந்திருந்த அமைச்சரை வரவேற்ற அவரது ஆதரவாளர்கள் அவரது பிறந்த நாளை இன்று கொண்டாடும் வகையில் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகினர். 

இதன் ஒரு பகுதியாக  திருநள்ளாற்றில் பாஜக பிரமுகர் பிரபாகரன், பட்டியலணி மாநில செயலாளர் கார்த்தி, பட்டியலணி மாவட்ட துணை தலைவர் சுதாகர் ஆகியோர் ஏற்பாட்டில் ஏழை எளிய மக்களுக்கு சேலை மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. 

முன்னதாக அமைச்சரை வரவேற்று மாலை மற்றும் சால்வை அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து கேக் வெட்டி அமைச்சரின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.

No comments

Copying is disabled on this page!