Breaking News

இரு மொழிக்கல்வி கொள்கை மூலமாக தமிழகத்தில் கல்வி அறிவு மிகச்சிறப்பாக வளர்ந்து கொண்டிருப்தாகவும்,உலகளவில் தமிழக கல்வி தரம் உயர்ந்துள்ளதால் கல்வி திட்டத்தில் எந்த குறையும் இல்லை என தமிழக கல்வி தரம் குறித்து ஆளுநர் ரவி கூறியதற்கு அமைச்சர் பொன்முடி பதிலடி.


விழுப்புரம் அரசு மகளிர் மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 9 அரசு பள்ளிகளை சேர்ந்த 900 மாணவர்கள், 1,189 மாணவிகள் என மொத்தம் 2,089 மாணவ, மாணவிகளுக்கு  1 கோடியே 69,640 மதிப்பில் விலையில்லா மிதிவண்டியை அமைச்சர் பொன்முடி, வழங்கினார், மாவட்ட ஆட்சியர் பழனி, விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர்  லட்சுமணன் கலந்து கொண்டு வழங்கினர். விழாவில் அமைச்சர் பொன்முடி பேசுகையில் தமிழ்நாட்டில் உயர்கல்வியில் தரம் சரியில்லை என்று சிலபேர் (ஆளுனர் ஆர்.என்.ரவி) கூறி வருகின்றனர்.

ஆனால் உயர்கல்வியில் தமிழ்நாட்டில் உள்ளதை போல எந்த மாநிலத்திலும் இல்லை என்பதை நிரூப்பித்து காட்டியுள்ளோம், அதனை தொடர்ந்து பேட்டியளித்த உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி கல்வி வளர்ச்சி பெற்றிருக்கிறது என்றால் திராவிட மாடல் ஆட்சி தான் காரணம் காலையில் சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை அறிமுகத்திய ஒரே முதல் மாநிலம் தமிழகம் தான் என்றும் விளையாட்டு துறையிலும்  சிறப்பாக வளர்ந்து வருவதாகவும் தமிழகத்தின் கல்வி தரம் பன்னாட்டு அளவில் திராவிட மாடல் ஆட்சியில் வளர்ந்து வருவதாகவும், கல்வி என்பது ஏட்டு சுரைக்காய் ஆக இருக்க கூடாது பன்முகத்திறனை மாணவர்கள் வளர்த்து கொள்ள வேண்டும் என தெரிவித்தார். 

தமிழகத்தின் கல்வி தரம் சரியில்லை என ஆளுநரின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் பொன்முடி உயர்கல்வியில் பாடத்திட்டத்தின் தரம் எப்படி இருக்கிறது என மாணவர்களே கூறுவதாகவும், கல்வியை அறிவியல் ரீதியாக வளர்க்க வேண்டுமென முதலமைச்சர் வெளிநாட்டில் இருந்து கூறியுள்ளதாகவும், அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதால் பள்ளிகல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பள்ளிகளில்  ஸ்மார்ட்/வகுப்புகள் மூலம் சொல்லி கொடுக்கப்படுவதாகவும், இரு மொழிக்கல்வி கொள்கை மூலமாக தமிழகத்தில் கல்வி அறிவு மிகச்சிறப்பாக வளர்ந்து கொண்டிருபதாகவும், முதலமைச்சர் அடிக்கடி எண்ணிக்கை உயர கூடாது தரம் உயர வேண்டுமென கூறிக்கொண்டிருப்பதால் இந்தியாவில் மட்டுமல்ல உலகத்திலையே தமிழகத்தின் கல்வி வளர்ந்துள்ளதாக கூறினார்.

அரசு பள்ளியில் படித்த மாணவர்தான் வீரமுத்துவேல் இஸ்ரோவில் இருக்கிறார். அன்றிலிருந்து  நமது கல்வி தரம் உயர்ந்துள்ளது என்பதற்கு உதாரணம் என்றும்  உலகளவில் கல்வி தரம் உயர்ந்துள்ளதாகவும் கல்வி திட்டத்தில் எந்த குறையும் இல்லை என்றும் இன்னும் வளர்க்க வேண்டுமென கூறியுள்ளதால் அதற்கான நடவடிக்கை எடுத்து வருவதாக பொன்முடி தெரிவித்தார். 

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயச்சந்திரன் முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன் நகர மன்ற துணைத் தலைவர் சித்திக்அலி, பள்ளியின் தலைமை ஆசிரியர் சசிகலா மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

No comments

Copying is disabled on this page!