Breaking News

உளுந்தூர்பேட்டையில் மனவளக் கலை பயிற்சி விழிப்புணர்வு கூட்டம்

 



கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை சார்பில் மனவளக்கலை பயிற்சி கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு துணைத் தலைவர் அன்பழகன் தலைமை தாங்கினார். நிர்வாக அறங்காவலர் பாலகணபதி வரவேற்றார். விழுப்புரம் மண்டல தலைவர் ரவிசந்தர், மண்டல செயலாளர் வேல்முருகன், பொருளாளர் ரவி, திருநாவுக்கரசு, பேராசிரியர் குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விரிவாக்க இணை இயக்குனர் அருள்ஜோதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு எளிய முறை உடற்பயிற்சி மற்றும் தியான பயிற்சி குறித்தும், காயகல்ப பயிற்சி, அறுந்தாய்வு பயிற்சிகள் குறித்து விளக்கி சிறப்புரையாற்றினார். செயலாளர் ஆதி அண்ணாமலை, வழக்கறிஞர் பொன். ராவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

No comments

Copying is disabled on this page!