Breaking News

மெமு ரயிலில் உள்ள மகளிர் பெட்டியில் ஆண்கள் பயணிப்பதாகவும் சீட்டுக்கட்டு விளையாடுவதாகவும் பெண்களுக்கு இருக்கையில் இடம் இல்லாமல் தரையில் அமர்ந்திருப்பதாக வீடியோ பதிவிட்டு குற்றச்சாட்டு.


திருச்சியில் இருந்து மயிலாடுதுறைக்கு வந்த மெமு ரயிலில் உள்ள மகளிர் பெட்டியில் ஆண்கள் பயணிப்பதாகவும் சீட்டுக்கட்டு விளையாடுவதாகவும் பெண்களுக்கு இருக்கையில் இடம் இல்லாமல்  தரையில் அமர்ந்திருப்பதாக வீடியோ பதிவிட்டு குற்றச்சாட்டு. கூடுதல் பெட்டிகளை இணைத்து பெண்களுக்கு தனி ரயில் பெட்டி ஒதுக்கீடு செய்ய கோரிக்கை.

திருச்சியில் இருந்து மயிலாடுதுறைக்கு  நேற்று மதியம் 1.10 மணி அளவில் திருச்சியில் மெமு ரயில் புறப்பட்டு மயிலாடுதுறைக்கு 3.40க்கு வந்து சேர்ந்தது.  இந்த ரயிலில் மகளிருக்கான  பெட்டியில் ஏராளமான ஆண்கள் ஏறி விடுவதால் பெண்கள் உட்கார இடம் இல்லாமல் தரையில் அமர்ந்து பயணம் செய்வதாகவும், இதில் தினந்தோறும் பயணிக்கும் ஆண்கள் ரயில் பெட்டியில் சீட்டுக்கட்டு விளையாடுவதாகவும் இது ரயில் பெட்டியா இல்லை விளையாட்டு மைதானமா என்று பெண் ஒருவர் கேள்வி எழுப்பி பேசும் ஆடியோ மற்றும் பெண்கள் தரையில் அமர்ந்து பயணிப்பதையும், ஆண்கள் சீட்டுகட்டு விளையாடும்  வீடியோ காட்சிகளை  வாட்ஸ் அப்பில் பதிவிட்டு குற்றம் சாட்டியுள்ளார். 

மெமு ரயிலில் மகளிர் மட்டும் என்று போர்டை தாங்கியுள்ள ரயில் பெட்டியில் ஆண்கள் உள்ளிட்ட பலர் பயணிப்பதால் பெண்கள் கூட்ட நெரிசலில் சிக்கி தவிப்பதாகவும் இதனால் குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் தாய்மார்கள் கர்ப்பிணி பெண்கள் அவதியடைவதாகவும் மெமு ரயிலில் கூடுதல் பெட்டிகளை இணைத்து பெண்களுக்கு என்று தனிப்பெட்டி ஒதுக்கி பெண்கள் பாதுகாப்பாக பயணம் செய்ய ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பயணிக்கும் ரயிலில் தினந்தோறும் சீட்டுக்கட்டு விளையாடி செல்லும் நபர்கள் மீது   ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே எதிர்பார்ப்பாக உள்ளது.

No comments

Copying is disabled on this page!