Breaking News

கும்மிடிப்பூண்டி ரயில்வே தண்டவாளம் அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலம் அழகிய நிலையில் கண்டெடுப்பு. கொலை செய்து வீசி சென்றனரா என காவல்துறை விசாரணை.


திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ரயில்வே தண்டவாளம் அருகே ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக கும்மிடிப்பூண்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சடலத்தை ஆய்வு செய்ததில் லேசான காயங்களுடன் அழுகிய நிலையில் சுமார் 35 முதல் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் இருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


சடலமாக மீட்கப்பட்டவர் யார், கொலை செய்து யாரேனும் வீசி சென்றனரா எப்படி உயிரிழந்தார் என காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments

Copying is disabled on this page!