அதிமுக சார்பில் உறுப்பினர்கள் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்த முன்னாள் அமைச்சர்.
திருவள்ளூர் மாவட்டம், திருவலாங்காடு ஒன்றியத்தில் உள்ள 10-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் அதிமுக உறுப்பினர்களுக்கு உறுப்பினர் உரிமை சீட்டு முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா வழங்கினார்.
திருவள்ளூர் அக்கட்சியின் மேற்கு மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியத்துக்கு உட்பட்ட பாகசாலை, கூலூர், கனகம்மாசத்திரம், பனப்பாக்கம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் உறுப்பினர்களுக்கு உறுப்பினர் உரிமை சீட்டு வழங்கும் நிகழ்ச்சி திருவாலங்காடு ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் என். சக்திவேல் தலைமையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சரும் திருவள்ளூர் அதிமுக மேற்கு மாவட்ட செயலாளருமான பி.வி.ரமணா கலந்துகொண்டு உறுப்பினர்களுக்கு உறுப்பினர் உரிமை சீட்டுகளை வழங்கி ஆலோசனை வழங்கினார்.
நிகழ்ச்சியில் ஒன்றிய அவைத் தலைவர் கே.எஸ்.மோகன் ஒன்றிய துணைச் செயலாளர் ஆனந்தன், முன்னாள் ஒன்றிய செயலாளர் தேவன் ஒன்றிய கவுன்சிலர் டில்லிபாபு உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
No comments