Breaking News

மயிலாடுதுறை மாவட்டத்தில் பாஜக உறுப்பினர் சேர்க்கை தொடக்கம்.


மயிலாடுதுறை மாவட்டத்தில் பாஜக உறுப்பினர் சேர்க்கை தொடக்கம்; பாஜக நிர்வாகிகள் தொண்டர்களை வீடு வீடாக சென்று சந்தித்து மிஸ்டு கால் மூலம் உறுப்பினர்களாக இணைத்தனர்.

பாஜக கட்சி விதிகளின்படி ஆறு ஆண்டுகளுக்கு ஒரு முறை உறுப்பினர்களை கட்சியில் புதிதாக சேர்ப்பது வழக்கம். அந்த வகையில் கட்சித் தலைவர் நட்டா இன்று பாரத பிரதமர் நரேந்திர மோடியை கட்சியில் முதல் உறுப்பினராக இணைத்தார். அதேபோல, தமிழ்நாட்டின் முதல் உறுப்பினராக எச்.ராஜா கட்சியில் இணைந்தார். இதை தொடர்ந்து மாவட்ட அளவில் பாஜக தொண்டர்களை கட்சியில் உறுப்பினர்களாக இணைக்கும் பணி தீவிரமாக தொடங்கியது. 


மயிலாடுதுறை நகர பாஜக சார்பில் நடைபெற்ற உறுப்பினர் சேர்க்கை முகாமில் பாஜக நகர தலைவர் வினோத் தலைமையில் மாவட்ட துணை தலைவர் முட்டம் செந்தில் குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் மயிலாடுதுறை நகராட்சி ஐந்தாவது வார்டில் உறுப்பினர் சேர்க்கையை தொடங்கினர். 


மயிலாடுதுறை வள்ளலார் கோவில் பகுதியில் உறுப்பினர் சேர்க்கையை தொடங்கிய கட்சி நிர்வாகிகள் தொடர்ந்து கட்சி தொண்டர்களை வீடு வீடாக சென்று சந்தித்து மிஸ்டு கால் மூலம் கட்சியில் மீண்டும் உறுப்பினர்களாக இணைத்தனர்.

No comments

Copying is disabled on this page!