இந்திய வரைபடத்தில் தமிழ்நாடு இருக்கும் வரை மேகதாட்டு அணையை கட்ட முடியாது - தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் தலைவர் பி.ஆர்.பாண்டியன் பேட்டி.
மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் கர்நாடக அரசு திட்டமிட்டு பொய் பிரசாரம் செய்து வருவதாகவும், இந்திய வரைபடத்தில் தமிழ்நாடு இருக்கும் வரை மேகதாட்டு அணையை கட்ட முடியாது என புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியிடம் மனு அளித்த பின்னர் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் தலைவர் பி.ஆர்.பாண்டியன் பேட்டி.
தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் காரைக்கால் விவசாயிகள் புதுச்சேரி மாநில முதலமைச்சர் ரங்கசாமியை சட்டப்பேரவையில் சந்தித்து மனு அளித்தனர்,
அந்த மனுவில், காவிரியின் குறுக்கே கடலில் கலக்கும் உபரி நீரை தடுத்து நிறுத்தி தமிழகத்தில் ராசி மணல் அணை கட்டுமானம் துவங்கிடவும், மேகதாட்டு அணை கட்டுமானத்தை தடுத்து நிறுத்திடவும், ஒத்த கருத்தை உருவாக்க தமிழ்நாடு புதுச்சேரி மாநிலங்கள் இணைந்து செயல்பட வேண்டும் என முதல்வரிடம் கேட்டுக் கொண்டனர்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பி.ஆர்.பாண்டியன், கர்நாடக அரசு ஒப்பந்தப்படி தமிழகம் புதுச்சேரிக்கு தர வேண்டிய காவிரி நீரை தருவதில்லை. இதுவரை உபரி நீரை தான் அவர்கள் தந்து கொண்டிருக்கிறார்கள். அந்த உபரி நீரையும் தடுத்து நிறுத்தும் வகையில் மேகதாட்டு அணையை கட்டும் நடவடிக்கையில் கர்நாடகா அரசு ஈடுபட்டு வருகிறது.
மேலும் தமிழகத்துக்கு இதனால் அதிக பயன் என்று திட்டமிட்டு பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர். கர்நாடக அரசின் முயற்சிகளை முறியடித்திட புதுச்சேரி தமிழகம் இணைந்து செயல்பட வேண்டும். இந்திய வரைபடத்தில் தமிழ்நாடு இருக்கும் வரையில் மேகதாட்டு அணையை கட்ட விடமாட்டோம் என்றார்.
- இரா. சரவணன் செய்தியாளர் புதுச்சேரி
No comments