Breaking News

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு புதுச்சேரியில் படையலுக்கு வைக்கப்பட்டிருந்த 111 கிலோ எடையுள்ள பிரம்மாண்ட லட்டு.


விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு புதுச்சேரியில் உள்ள இனிப்பகம் ஒன்றில் படையலுக்கு வைக்கப்பட்டிருந்த 111 கிலோ எடையுள்ள பிரம்மாண்ட லட்டு பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

புதுச்சேரியில் விநாயகர் சதூர்த்தி விழா வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, புதுச்சேரி 45 அடி சாலையில் உள்ள ஸ்ரீ ஜெயின் இனிப்பகம் ஒன்றில் அதன் நிறுவனர்  விக்ரம் முயற்சியில் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தியின் போது பெரிய அளவிலான லட்டு தயார் செய்யப்பட்டு பூஜை செய்யப்படுவது வழக்கம். முதன்முதலில் 11 கிலோவில் செய்த லட்டின் எடையை ஒவ்வொரு ஆண்டும் ஐந்து ஐந்து கிலோவாக அதிகரித்து வந்தனர்.


இந்த நிலையில் 21வது ஆண்டாக இன்று 111கிலோ எடையுள்ள பிராமண்ட லட்டு செய்யப்பட்டு விநாயகருக்கு படையல் வைக்கப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.மூன்று தினங்கள் படையலில் வைக்கப்பட்டிருக்கும் இந்த மெகா லட்டு 3-ம் நாளில் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.


- இரா.சரவணன் செய்தியாளர் புதுச்சேரி

No comments

Copying is disabled on this page!