திண்டிவனம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் மெகாலோக் அதாலத் 6.91 கோடி ரூபாய் வழக்குகள் தீர்வு காணப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசிய மெகாலோக் அதாலத் நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல் மாவட்ட நீதிபதி முகமது பாரூக் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார்.திண்டிவனம் நீதித்துறை நடுவர் கமலா அனைவரையும் வரவேற்றார்.மோட்டார் வாகன தீர்ப்பாய பொறுப்பு நீதிபதி புஷ்பராணி,மாவட்ட உரிமையியல் நீதிபதி நர்மதா ஆகியோர் லோக் அதாலத் குறித்து விளக்கி பேசினர்.
வழக்கறிஞர் சங்கங்களின் தலைவர்கள் சண்முகம், பூபால் வழக்கறிஞர் நல சங்க செயலாளர் கிருபாகரன் ஆகியோர் மக்கள் நீதிமன்றத்தின் மூலம் வழக்குகளுக்கு தீர்வு காணும் முறை குறித்தும், அதன் எண்ணற்ற பயன்கள் குறித்தும் சிறப்புரையாற்றினர். மக்கள் நீதிமன்றத்தில் வழக்குகளை எளிமையாக சமரசம் செய்வது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் இதில் மோட்டார் வாகன விபத்து வழக்கு உட்பட மொத்தம் வழக்குகள் 548 ரூ.,6.91.96.441கோடி மதிப்பிற்கு தீர்வு காணப்பட்டது.
No comments