தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் வடிகால் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தார்சாலை அமைத்தல், கழிவுநீர் கால்வாய், மழைநீர் வடிகால், பேவர் பிளாக் சாலை, ஹைமாஸ் விளக்கு, பூங்காக்கள் போன்ற பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி மாநகராட்சிக்குட்பட்ட போல்டன்புரம், பகுதிகளில் நடைபெற்று வரும் வடிகால் பணிகள் மற்றும் மில்லர்புரம் பகுதியில் தொடங்கவிருக்கும் பகுதிகளையும் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது, திமுக வட்ட பிரதிநிதி டி.கே.ஸ்.துரை, போல்பேட்டை பகுதி பிரதிநிதி ஜேஸ்பர், மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ் மற்றும் மாநகராட்சி துறைசார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.
No comments