புதுவையில் பேரிடா் காலத்தில் மீட்புப் பணியில் ஈடுபடுவோருக்கான சாதனங்கள் முதல்வர் ரங்கசாமி வழங்கினார்.
புதுவையில் மழை வெள்ளம் போன்ற பேரிடா் காலங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் தன்னாா்வலா்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனா். அதன்படி, புதுச்சேரி வருவாய், மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் ‘ஆப்தமித்ரா’ எனும் பேரிடா் கால நண்பன் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.அந்த திட்டத்தில் 500 தன்னாா்வலா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. பயிற்சி பெற்ற தன்னாா்வலா்கள் பேரிடா் காலத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனா்.
அவா்களுக்கான மீட்பு சாதனங்கள் உள்ளிட்டவை வழங்கும் நிகழ்ச்சி, புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள முதல்வரின் அறையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வா் ரங்கசாமி, புதுவையைச் சோ்ந்த தன்னாா்வலா்களுக்கு தலா 15 சாதனங்கள் அடங்கிய உபகரண பைகளை வழங்கினாா். பிராந்திய வாரியாக புதுச்சேரியில் 215 போ், காரைக்காலில் 100 போ், ஏனாமில் 50 போ், மாஹே பகுதியைச் சோ்ந்த 135 பேருக்கு பைகள் வழங்கப்பட்டன.
- இரா.சரவணன் செய்தியாளர் புதுச்சேரி
No comments