தியாகி முத்துக்குமரப்ப ரெட்டியாரின் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு அமைச்சர் சரவணன் குமார்.
தியாகி முத்துக்குமரப்ப ரெட்டியாரின் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு அமைச்சர் சரவணன் குமார், வைத்திலிங்கம் எம்பி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள், தியாகி முத்துக்குமரப்ப ரெட்டியாரின் பிறந்த நாள் புதுச்சேரி அரசு சார்பில் இன்று கொண்டாடப்பட்டது.
இதனையொட்டி நெட்டப்பாக்கம் காவல் நிலையம் அருகில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் சரவணன் குமார், சட்டப்பேரவைத் துணைத்தலைவர் ராஜவேலு, பாராளுமன்ற மக்களவை உறுப்பினர் வைத்திலிங்கம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
No comments