தருமபுரம் ஆதீனத்தில் சிறுதானிய பொருட்கள் தயாரிக்கும் தொழிற்கூடத்தை பார்வையிட்ட ஆதீனமகா குரு.
தருமபுரம் ஆதீனத்தில் கம்பு கேழ்வரகு உள்ளிட்ட 20 வகையான சிறுதானிய பொருட்கள் அவல், பாரம்பரிய அரிசி வகைகள் உள்ளிட்ட பொருட்களை தயார் செய்யும் சிறு தொழில் கூடத்தை தருமபுரம் ஆதீன குரு மகா சன்னிதானம் துவக்கி வைத்தார், உள்நாடு வெளிநாடுகளில் சிறுதானிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் தருமபுரம் பகுதி மக்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க முடியும் என்று ஆதீனம் ஆசியுரை.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த தருமபுரத்தில் 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த சைவத் திருமடம் அமைந்துள்ளது. ஆதீனத்தின் சார்பில் சிறுதானியம் பற்றிய விழிப்புணர்வை பொதுமக்களுக்கு கொண்டு சேர்க்கும் வகையிலும், அவை அதிக அளவு பயன்பாட்டிற்கு கொண்டுவரும் நடவடிக்கையாக, சிறுதானிய உணவு உணவுப் பொருள் தொழில் கூடம் இன்று துவக்கப்பட்டது. தருமபுரம் ஆதீன குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் சிறப்பு பூஜை செய்து தொழில் கூடத்தை திறந்து வைத்தார்.
இந்த தொழில் கூடத்தில் கருப்புகவுனி, இரத்தசாலி, மாப்பிள்ளை சம்பா, கிச்சலிசம்பா, சீரக சம்பா, உள்ளிட்ட தமிழர்களின் பாரம்பரிய நெல் ரகங்கள், வரகு சாமை திணை கம்பு கேழ்வரகு உள்ளிட்ட சிறுதானிய பொருட்கள், அவல் வகைகள், ரசாயன கலப்படமில்லாத சத்துமாவு பொருட்கள், செக்கு எண்ணெய் ஆகியவை தயார் செய்யும் இந்த தொழில் கூடத்தின் மூலம் தருமபுரம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் வேலை வாய்ப்பு பெற முடியும்.
மேலும், இவற்றை நல்ல முறையில் பேக்கிங் செய்து வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்ய உள்ளதாக ஆதீன குரு மகா சன்னிதானம் நிகழ்ச்சியின் போது தெரிவித்தார். நிகழ்ச்சியில் முக்கிய பிரமுகர்கள் கட்டளை தம்புரான் சுவாமிகள் உள்ளிட்ட ஏராளமானார் பங்கேற்றனர்.
No comments