Breaking News

தற்காலிக பணியாளர்களை தமிழக அரசு உடனடியாக நிரந்தரம் செய்ய வேண்டும் - தமிழ்நாடு தொழில்நுட்ப களப்பணியாளர்கள் சங்க மாவட்ட தலைவர் ராமகிருஷ்ணன்.


பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத் துறையில் 15 ஆண்டுகளாக தற்காலிக பணியாளர்களாக உள்ள தொழில்நுட்ப களப்பணியாளர்கள் 3,407 பேரை தமிழக அரசு உடனடியாக நிரந்தரம் செய்ய வேண்டும் இல்லை என்றால் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும், மாநில கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற சங்கத்தின் மாவட்ட தலைவர் ராமகிருஷ்ணன் பேட்டி.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் தமிழ்நாடு தொழில்நுட்ப களப்பணியாளர்கள் சங்கம் சார்பில் மாநில அளவிலான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சங்கத்தின் மாநில தலைவர் சி ராமகிருஷ்ணன் பங்கேற்று சிறப்புரையாற்றினார். கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராமகிருஷ்ணன் கடந்த 15 ஆண்டுகளாக பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத் துறையில் ஆயிரக்கணக்கானோர் தற்காலிக பணியாளர்களாக பணியாற்றி வருகின்றனர். இவர்களை பணி நிரந்தரம் செய்ய கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டு அந்த கமிட்டியின் பரிந்துரையின் பெயரில் 3,407 பேர் பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும். 

ஆனால் திமுக அரசு பொறுப்பேற்றதிலிருந்து இதுவரை பணி நிரந்தரம் செய்யவில்லை. பல்வேறு போராட்டங்களை நடத்தியும் பலனில்லாத நிலையில் விரைவில் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்று தெரிவித்தார். 

No comments

Copying is disabled on this page!