விவசாயிகள் மக்காச்சோளம் பயிர் சாகுபடி செய்ய வேளாண்மை உதவி இயக்குனர் வேண்டுகோள்.
மரக்காணம் வட்டாரத்தில் விவசாயிகள் தொன்று தொட்டு நெல், மணிலா, உளுந்து, கம்பு, எள் உள்ளிட்ட பல்வேறு பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர். ஆனால் அந்த பயிர்களில் அதிக செலவும், போதிய லாபமும் கிடைப்பதில்லை என கருதுகின்றனர். இதற்கு மாற்றாக மக்காச்சோளம் பயிர் சாகுபடி செய்யலாம் என வேளாண்துறை அலுவலர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். இது குறித்து மரக்காணம் வட்டார வேளாண்மை இயக்குனர் சரவணன் கூறியதாவது.
மக்காச்சோளத்தினை உணவிற்காகவும், மதிப்பு கூட்டப்பட்ட பொருளாகவும், கோழி தீவனத்திற்காகவும் அதிகளவில் பயன்படுத்துகின்றனர். நாளுக்கு நாள் கோழி பண்ணைகள் அதிகரித்து வரும் நிலையில் மக்காச்சோளத்திற்கான தேவையும் அதிகரித்து வருகிறது., மக்காச்சோளம் சாகுபடி செய்திட மணல் கலந்த களிமண் மற்றும் மணல் கலந்த செம்மண் நிலங்கள் ஏற்றதாகும். உழவு முதல் அறுவடை வரை ஏக்கருக்கு ரூபாய் 15000 முதல் 20000 வரை மட்டுமே செலவாகும்.,ஒரு ஏக்கருக்கு 4000 கிலோ மகசூல் எடுக்கலாம்., ஏக்கருக்கு 90000 ரூபாய் வரை மொத்த வருமானமும், 80000 ரூபாய் வரை நிகர வருமானமும் கிடைக்க வாய்ப்புள்ளது.
குறைந்த காலத்தில், குறைந்த நீர் பயன்பாட்டில், குறைந்த சாகுபடி செலவில் அதிக வருமானம் பெற மக்காச்சோளத்தை பயிரிட விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். வேளாண் துறையும் மக்காச்சோளம் ஒரு எக்டருக்கு பயிரிட தேவையான வீரிய ஒட்டு விதைகள்,உயிர் உரங்கள்,நானோ யூரியா, அங்கக உரங்கள் உள்ளிட்ட இடு பொருட்களை ஆறாயிரம் மானியத்தில் வழங்கி வருகிறது.
தேவைப்படும் விவசாயிகள் வேளாண் விரிவாக்க மையங்களை அணுகி பயன்பெற கேட்டுக் கொள்ளப்படுவதாக கூறினார்.
No comments