Breaking News

மண்டபத்தூர் எல்லையம்மன் ஆலய மகாகும்பாபிஷேகம் ஏராளமானோர் பங்கேற்று தரிசனம்.


காரைக்கால் மாவட்டம் மண்டபத்தூர் மீனவ கிராமத்தில்  அமைந்துள்ளது பழமை வாய்ந்த ஸ்ரீ எல்லையம்மன் ஆலயம். இவ்வாலயத்தில் ஸ்ரீவிநாயகர், ஸ்ரீமுருகன், ஸ்ரீபெரியாச்சி அம்மன், ஸ்ரீகாத்தவராயன், ஸ்ரீகருப்பண்ணசாமி த்தில் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டு கடந்த 3 மாதங்களாக கோவில் புணரமைப்பு வேலைகள் நடைபெற்று வந்த நிலையில், கோவில் திருப்பணி வேலைகள் நிறைவுற்று கடந்த 13 ஆம் தேதி விக்னேஸ்வரர் பூஜையுடன் கும்பாபிஷேக யாகசாலை பூஜைகள் ஆரம்பிக்கப்பட்டு இன்று நான்காம் கால யாகசாலை பூஜைகள் நிறைவுற்று, மகா பூர்ணாஹூதி நடைபெற்றது. 

அதனைத் தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு, கட புறப்பாடு தொடங்கியது. புனித நீர் அடங்கிய கலசங்கரை சிவாச்சாரியார்கள் சுமந்து கோயிலை வலம் வந்து கும்பத்தில் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மூலவர்களுக்கு மகா அபிஷேகம் நடைபெற்று மகா தீபாரதனை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ எல்லையம்மன் அருள் பெற்றனர். 15 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற கும்பாபிஷேகம் என்பதால் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான மக்கள் பங்கேற்றனர். 

No comments

Copying is disabled on this page!